மே 1 ஆம் திகதியான நேற்றைய தினம், மே தின ஊர்வலங்கள் பிரான்ஸ் நாடு முழுவதும் பரவலாக இடம்பெற்றது. இதில் பரிஸுக்குள் இடம்பெற்ற ஊர்வலத்தில் பெரும் வன்முறைகள் வெடித்தது.Violence Paris May Day rally
நேற்று காலை Place de la Bastille இல் ஆரம்பித்த மே தின ஊர்வலம், மெல்ல மெல்ல Austerlitz மேம்பாலம் நோக்கி நகர்ந்தது. இந் நிலையில், ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் காவல்துறையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர்.
மேலும், அப்பகுதியில் இருந்த McDonald’s உணவகத்துக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கடையை அடித்து நொருக்கினார்கள். அதற்கு பக்கத்திலிருந்த பிற கடைகள் மற்றும் பேரூந்து தரிப்பிடம் அனைத்தும் அடித்து நொருக்கபட்டு, உடைக்கப்பட்டது. இதனால் பாரிய பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அப்பகுதியிற்கு வந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ய முனைந்த போது, அவர்கள் காவல்துறையினர் நோக்கி கற்களை வீசியுள்ளனர். இதனால் கண்ணீர்புகை வீசி கலவரத்தை அடக்கியுள்ளனர் காவற்துறையினர். இது தவிர, கலவரத்தில் 1200 பேர் வரை ஈடுபட்டதாகவும், 200 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
**Most related Tamil news**
- பிரான்ஸில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் பெரும் பரபரப்பு!
- பிரான்ஸில், CRS அதிகாரி மீது தாக்குதல்!
- எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு?
- எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ஹன்சிகாவின் அதிரடி
**Tamil News Groups Websites**