பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! : அறிவித்தது ஐசிசி!

0
828
mohammad hafeez cleared bowling action

(mohammad hafeez cleared bowling action)

பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொஹமட் ஹபீஸுக்கு விதிக்கப்பட்டிருந்த பந்துவீச்சு தடையை ஐசிசி நீக்கியுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டித் தொடரின் போது, ஹபீஸ் ஐசிசி விதிமுறைக்கு மாறாக பந்து வீசுகிறார் என குற்றச்சாட்டப்பட்டது.

எனினும் ஹபீஸ் கடந்த மாதத்தில் இருந்து அவரது பந்து வீச்சு பாணியை மாற்றியமைத்து பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். தொடர்ந்து அவரது பந்து வீச்சு பாணியில் முழுமையான மாற்றம் ஏற்பட்டத்தை தொடர்ந்து ஐசிசி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தற்போது சோதனையின் முடிவை வெளியிட்டுள்ள ஐசிசி, ஹபீஸின் பந்து வீச்சு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் மீண்டும் சர்வதேச போட்டிகளில் பந்து வீச முடியும் எனவும் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணிக்குழாமில் ஹபீஸ் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>