அயர்லாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 76 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
இங்கிலாந்து அணியுடனான தொடருக்கு முன்னர் இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது.
இதன் முதல் போட்டி டப்லினில் நேற்று நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அயர்லாந்து அணியின் பந்து வீச்சாளர்களை தினறடித்தனர்.
அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 61 பந்துகளில் 97 ஓட்டங்களை விளாசி, சதத்தை தவறவிட்டார். தொடர்ந்து 45 பந்துகளுக்கு 74 ஓட்டங்களை சிக்கர் தவான் விளாச இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்தது.
தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்களில் டோனி 11 ஓட்டங்கள், ரெய்னா 10 ஓட்டங்கள் மற்றும் விராட் கோஹ்லி ஓட்டங்களின்றி டக்கவுட் ஆக, ஹர்திக் பாண்டியா 6 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பந்து வீச்சில் சேஷ் நான்கு விக்கட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் செனன் 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொடுக்க, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டு, தோல்வியடைந்தது.
இந்திய அணிசார்பில் சுழற்பந்து வீச்சில் அசத்திய குல்டீப் யாதவ் 4 விக்கட்டுகளையும், யுஸ்வேந்திர சஹால் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>
- ஏன் இப்படி செய்தார்? : பாகிஸ்தான் வீரர் செய்த மோசமான செயல்!!!
- உச்சகட்ட சோதனைக்கு ஆளாக்கப்பட்ட அவுஸ்திரேலியா!!! : ஏன் தெரியுமா?
- பிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்!!!
- சந்திமால் உண்மையில் பந்தை சேதப்படுத்தினாரா? : வெளியாகிய முக்கிய தகவல்!!!
- இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் ராயுடு!!!
- மோசமான சாதனையை சொந்தமாக்கிய பிரபல அணிகள்!!!
- பந்தை சேதப்படுத்தி சிக்கிக்கொண்ட சந்திமால்… : ஐசிசியின் அதிரடி நடவடிக்கை!!!
- உலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இரண்டு அணிகள் : எந்தெந்த அணிகள்?
<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>
Ireland vs India 1st T20 news Tamil,Ireland vs India 1st T20 news Tamil,Ireland vs India 1st T20 news Tamil