இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கெதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் வீரர்களுக்கு அதிநவீன யோ யோ டெஸ்ட் எனப்படும் உடற்தகுதி பரிசோதனை நடத்தப்பட்டது.
யோ யோ டெஸ்டில் சித்திபெறும் வீரர்களுக்கு மாத்திரமே இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடரில் பங்கேற்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய அணி எதிர்வரும் 27 மற்றும் 29ம் திகதிகளில் அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கெதிரான 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இறுதியாக சஞ்சு செம்சுன் யோ யோ டெஸ்டில் 16.1 புள்ளிகளை கடக்க முடியாமல் தோல்வியடைந்து இந்திய ஏ அணிக்குழாத்துக்குள் இடம் கிடைக்காமல் வெளியேறியுள்ளதுடன், மொஹமட் சமியும் யோ யோ டெஸ்டில் தோல்வியடைந்து, ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய வீரர்களுக்கான யோ யோ டெஸ்ட் நேற்று பெங்களூரில் நடைபெற்றது. கடந்த முறையையும் விட இம்முறை யோ யோ டெஸ்டின் வெற்றிபெறுவதற்கு 16.3 புள்ளிகளை பெறவேண்டும் என பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார்.
இம்முறை யோ யோ டெஸ்டில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டவர் விராட் கோஹ்லி. கழுத்து உபாதை காரணமாக கவுண்டி கிரிக்கெட்டிலிருந்து வெளியேறியிருந்த இவர், மிகவும் இலகுவாக யோ யோ டெஸ்டில் வெற்றிபெற்றார்.
இவருடன் டோனி, புவனேஷ்வர் குமார், ஜாதவ் ஆகியோரும் வெற்றிபெற்றதுடன், கடந்த வருடம் யோ யோ டெஸ்டில் வெற்றிபெறத் தவறிய, சுரேஷ் ரெய்னாவும் இம்முறை வெற்றிபெற்றார்.
இவர்களுடன் ஜஸ்பிரட் பும்ரா, வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், சித்தார்த் கவுல் மற்றும் மனிஷ் பாண்டி ஆகியோரும் டெஸ்டில் வெற்றிபெற்றனர்.
ஆனால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை தற்போது சிறந்த துடுப்பாட்ட பலத்துடன் இருக்கும் அம்பத்தி ராயுடு யோ யோ டெஸ்டில் தோல்வியடைந்துள்ளமை. ராயுடு 14 புள்ளிகளை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தார். இதனால் ராயுடு இங்கிலாந்து தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை எனவும் அவருக்கு பதிலாக புதிய வீரர் ஒருவர் இணைக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மே.தீவுகளிடம் சரணடையுமா இலங்கை? : தொடர்கிறது போராட்டம்!!!
- மே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி!!!
- 11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்!!!
- மே.தீவுகளுக்கெதிரான அடுத்த போட்டியில் களமிறங்கும் முன்னணி வீரர்!!!
- சென்னை அணியில் அதிரடியை வெளிப்படுத்தியற்கான காரணம் என்ன? : கூறுகிறார் டோனி
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>
Ambati rayudu fails Yo Yo Test news Tamil, Ambati rayudu fails Yo Yo Test news Tamil