ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
இறுதியாக இந்திய அணி தங்களது சர்வதேச போட்டியில், இலங்கையில் நடைபெற்ற சுதந்திரக் கிண்ணத்தில் விளையாடியது. பின்னர் இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றது.
தற்போது இந்திய அணி மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியுள்ள நிலையில், 14ம் திகதி ஆப்கானிஸ்தான் அணியை அவர்களது முதல் டெஸ்ட் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.
இதற்கான பயிற்சிகளை பெங்களூர் மைதானத்தில் ஆரம்பித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள், புதிதாக வழங்கப்பட்டுள்ள பயிற்சி உடையில் வந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சி உடையை மாற்றுவது இது முதற்தடவையல்ல. இதற்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற சுதந்திரக் கிண்ணத்தின் போதும், தங்களது உத்தியோகபூர்வ உடை அனுசரணையாளர்களான நைக் நிறுவனத்திடம் உடையின் தயாரிப்பு குறித்து விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
தற்போது இன்று பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு நைக் நிறுவனம் புதிய பயிற்சி உடையை வழங்கியுள்ளது. புதிதாக வழங்கப்பட்டுள்ள பயிற்சி உடையில் இந்திய அணியின் நீல நிறம் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக செம்மஞ்சல் மற்றும சாம்பள் நிறம் கலந்த உடை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் நீல நிறத்தினால் அடையாளப்படுத்தப்படும் இந்திய அணியின் பயிற்சி உடையில் உள்ள நிறத்தினை மாற்றியுள்ளமை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
இதுதொடர்பில் சமுகவலைத்தளங்களில் பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றது.
- மே.தீவுகளிடம் சரணடையுமா இலங்கை? : தொடர்கிறது போராட்டம்!!!
- மே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி!!!
- 11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>
Indian cricket team Changed jersey Color, Indian cricket team Changed jersey Color, Indian cricket team Changed jersey Color