டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் மெழுகு அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம் (புதன்கிழமை) மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோஹ்லியின் உருவம் அடங்கிய மெழுகு சிலை வைக்கப்பட்டிருந்தது.
எனினும் சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அருங்காட்சியகம், அதனை உடனடியாக சரிசெய்வதற்கு கொண்டு சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
சிலை வைக்கப்பட்ட ஓரிரண்டு நாட்களுக்குள் எப்படி உடைந்தது என கேள்வி எழுப்பப்ட, அதற்கான பதிலை அருங்காட்சியகம் வெளியிட்டுள்ளது.
அதாவது விராட் கோஹ்லியின் சிலை வைக்கப்பட்ட நாளில் இருந்து அதிகமான மக்கள் வருகை தருகின்றனர். அதிலும் குறித்த மெழுகு சிலையுடன் செல்பி எடுத்தும் செல்கின்றனர். இவ்வாறு செல்பி எடுக்கும் போதே விராட் கோஹ்லி சிலையின் காது பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும் சிலை உடனடியாக திருத்தப்பட்டு, அருங்காட்சியகத்துக்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் டேவிட் பெகம், லைனல் மெஸ்ஸி, கபில் தேவ், உசைன் போல்ட் ஆகியோரின் மெழுகு சிலைகளும் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- துரதிஷ்ட வசமாக வெளியேறுகிறார் செரீனா வில்லியம்ஸ்!
- துடுப்பாட்ட வரிசைக்கு பலம் சேர்த்திருக்கும் குசல் பெரேரா! : நிறைவுக்கு வந்தது பயிற்சிப்போட்டி!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>
virat kohli wax statue damaged news Tamil, virat kohli wax statue damaged news Tamil, virat kohli wax statue damaged news Tamil