சந்திக ஹதுருசிங்கவுக்கு பதிலாக புதிய பயிற்றுவிப்பாளர்!!!

0
553
Bangladesh new head coach Steve Rhodes news Tamil

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஸ்டீவ் ரோட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டள்ளது.

ஸ்டீவ் ரோட்ஸ் எதிர்வரும் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ணம் வரையில் பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த சந்திக ஹதுருசிங்க திடீரென பதவி விலகியதன் காரணமாக, இடைக்கால பயிற்றுவிப்பாளராக கவுட்ணி வேல்ஸ் செயற்பட்டு வந்தார்.

எனினும் தங்களுக்கான முழுநேர பயிற்றுவிப்பாளர் ஒருவரை தேடிவந்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, சுமார் 8 மாதங்களுக்கு பின்னர் புதிய பயிற்றுவிப்பாளரை அறிவித்துள்ளது.

ஸ்டீவ் ரோட்ஸ் பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார் என்ற தகவல் வெளியிடப்பட்டிருந்த போதிலும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஷ்முல் ஹாசன் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்ற கருத்தை முன்வைத்திருந்தார்.

எனினும் பங்களாதேஷ் அணியுடன் இணைந்து பணியாற்றியிருந்த கெரி கிரிஸ்டனின் பரிந்துரைக்கு அமைய, ஸ்டீவ் ரோட்ஸ் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ரோட்ஸ், 11 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் மாத்திரமே விளையாடியிருந்தாலும், 440 முதற்தர போட்டிகளில் விளையாடி 14389 ஓட்டங்களை குவித்துள்ளார்.

அதுமாத்திரமின்றி ஸ்டீவ் ரோட்ஸ், கவுண்டி அணியான வொர்கெஸ்டர்சையர் அணியின் பயிற்றுவிப்பாளராக 2006ம் ஆண்டுமுதல் கடந்த ஆண்டுவரை பணியாற்றியிருந்தார். அத்துடன் இங்கிலாந்து அணியின் 19 வயதுக்குற்பட்ட அணியின் பயிற்றுவிப்பாளராகவும் இவர் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>

Bangladesh new head coach Steve Rhodes news Tamil