பங்களாதேஷ் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா ஆப்கானிஸ்தான்?

0
660
Afghanistan vs Bangladesh T20 2018 news Tamil

ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

பல இருபதுக்கு-20 தொடர்களில் விளையாடியுள்ள அனுபவம் வாய்ந்த பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற்ற முதல் போட்டியில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பங்களாதேஷ் அணி தங்களது துடுப்பாட்டம், பந்து வீச்சு என இரண்டு பக்கங்களையும் சரிசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பந்து வீச்சில் முஷ்தபிசூர் ரஹ்மானுக்கு பதிலாக அழைக்கப்பட்டிருந்த அபுல் ஹாசன் 2 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், 3 ஓவர்களுக்கு 40 ஓட்டங்களை வழங்கியிருந்தார். அதுமாத்திரமின்றி இறுதி 5 ஓவர்களுக்கு பங்களாதேஷ் அணியினர் 71 ஓட்டங்களை எதிரணிக்கு வழங்கியிருந்தனர். இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி பந்து வீச்சில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அனுபவம் வாய்ந்த தமிம் இக்பால் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழந்ததுடன், பங்களாதேஷ் அணியின் அடுத்துவந்த வீரர்களும் துடுப்பாட்டத்தில் மோசமாக செயற்பட்டனர்.

பங்களாதேஷ் அணியின் வெற்றிபெறும் வாய்ப்பை உருவாக்கிக்கொள்வதற்கு, ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதுமாத்திரமின்றி ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை நிதானமாக எதிர்கொள்ள வேண்டும்.

மறுபக்கம் ஆப்கானிஸ்தான் தங்களுடைய முதல் இருபதுக்கு-20 போட்டியில் எவ்வித தவறுகளையும் பெரிதாக விடவில்லை. அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஓட்டக்குவிப்பில் ஈடுபட்டதுடன், ஏனைய வீரர்களுக்கு தங்களுடைய பங்கை சிறப்பாக செய்தனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சு ஆரம்பமும் சிறப்பாக இருந்தது. ரஷீட் கான், மொஹமது நபி மற்றும் முஜிபூர் ரஹ்மான் ஆகியோரின் சுழல் பங்களாதேஷ் அணிக்கு மிகப்பெரிய சவால்.

இதனால் இன்றைய போட்டியில் வெற்றிபெறுவதற்கான அதிக வாய்ப்புகளை ஆப்கானிஸ்தான் அணி கொண்டுள்ளது. எனினும் பங்களாதேஷ் அணியும் இலகுவாக தோல்வியை ஏற்றுக்கொள்ளக்கூடிய அணி அல்ல. இன்றைய போட்டியில் அவர்களின் யுத்திகள் ஆப்கானிஸ்தான் அணிக்கு புதிய சவாலாகவும் இருக்கலாம்.

<<Tamil News Group websites>>

Afghanistan vs Bangladesh T20 2018 news Tamil, Afghanistan vs Bangladesh T20 2018 news Tamil