US New Jersey Woman Attacked
அமெரிக்காவின் நிவ்ஜேர்ஸியில் பெண்ணொருவரை பொஸிஸ் அதிகாரி தாக்கிய காணொளியொன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிவ்ஜேஸி கடற்கரையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எமிலி வீமென் என்ற 20 வயது யுவதி மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த யுவதி, தனது குழந்தை, தந்தை மற்றும் வேறொருவருடன் கடற்கரைக்கு வந்துள்ளார்.
அங்கு அவரிடம் மது இருந்துள்ளது. மது அருந்துவதற்கு ஆகக்குறைந்த வயது 21 ஆக உள்ள நிலையில் அவர் குடித்துள்ளாரா என பொலிஸார் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் இல்லை என்று கூறியதை அடுத்து பொலிஸார் இயந்திரத்தின் உதவியுடன் பரிசோதித்துமுள்ளனர்.
இதன்பின்னர் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே , அவ் யுவதியை தாக்கும் அளவுக்கு சென்றுள்ளது.
அப்பெண் தற்போது கைதுசெய்யப்படுள்ளார். மேலும் பொலிஸ் அதிகாரிகள் வேறு பிரிவுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Video Credit: Brian Harrod
https://www.youtube.com/watch?v=_Bbez3EFeTY