மிஸ்டர் 360க்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த கங்குலி!!! : எப்படி?

0
750
Sourav Ganguly pays tribute AB de Villiers

(Sourav Ganguly pays tribute AB de Villiers)

தென்னாபிரிக்க அணியின் ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வுபெற்றதை தொடர்ந்து, முன்னாள் பிரபலங்கள், வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் அவரது சிறந்த கிரிக்கெட் வாழ்க்கைக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒவ்வொருவரும் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இணையத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வரும் வேளையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி வித்தியாசமாக தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்றைய தினம் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டி ஆரம்பிக்கும் முன், மைதானத்தில் போட்டியின் காணொளியை ஒளிபரப்பும் திரையில் தனது வாழ்த்தினை கங்குலி காட்சிப்படுத்தியுள்ளார்.

குறிப்பிட்ட வாழ்த்து செய்தியில், “சர்வதேச கிரிக்கெட்டுக்கு உங்களது பங்களிப்பை வழங்கியமைக்கு எனது பாராட்டுகள். கிரிக்கெட் உங்களை எப்போதும் ஞாபகம் வைத்திருக்கும். நீங்கள் ஒரு சம்பியன் வீரர்” என பதிவிட்டுள்ளார்.

<<Tamil News Group websites>>