விக்கட் காப்பாளரின் கிளவுஸை வாங்கி அணிந்தது குற்றமா? :: விதிமுறையை மீறிய கெயில்!

0
1068
chris-gayle-wicket-keeping-issue-news-tamil

(chris gayle wicket keeping issue news Tamil)

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் அணி 13 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் விக்கட் காப்பளர் கே.எல்.ராஹுலின் கிளவுஸை அணிந்து பஞ்சாப் அணியின் கிரிஸ் கெயில் விக்கட் காப்பாளர் போன்று பாவனை செய்துக்கொண்டிருந்தார்.

இந்த காணொளி சமுகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

தற்போது கிரிஸ் கெயில் கிளவுஸை அணிந்தமை ஐசிசி விதிமுறையை மீறிய குற்றம் என தெரியவந்துள்ளது. அதாவது ஐசிசியின் 27.1வது விதிமுறைப்படி விக்கட் காப்பாளரின் கிளவுஸை அணியின் வீரர்கள் அணிந்தால் குற்றமாகும். இதற்கு தண்டனையாக எதிரணிக்கு 5 ஓட்டங்கள் மேலதிகமாக வழங்கப்பட வேண்டும். ஆனால் நேற்றைய போட்டியில் குறித்த தண்டனை வழங்கப்படாமை குறித்து தற்போது கேள்வி எழுந்து வருகின்றது.

இதே குற்றத்திற்காக அவுஸ்திரேலியாவின் உள்ளூர் அணியான குயின்ஸ்லாந்து அணியின் வீரர் ரென்ஷா விக்கட் காப்பாளரின் கிளவுஸை அணிந்ததால் எதிரணிக்கு 5 ஓட்டங்கள் மேலதிகமாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

<<Related News>>