கிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா? : வெளியாகியுள்ள புதிய தகவல்!!!

0
1414
sri lanka cricket board election 2018 news Tamil

(sri lanka cricket board election 2018 news Tamil)

இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் தினம், புதிய விளையாட்டுத்துறை அமைச்சரின் வேண்டுகோலுக்கு இணங்க ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி நடக்கவுள்ளதாக கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. அதுமாத்திரமின்றி வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ளும் தினம் இன்றுடன் நிறைவடையும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஷ்தபா, கிரிக்கெட் சபையுடன் வருடாந்த பொதுக் கூட்டம் ஒன்றை நடத்திய பின்னர் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விளையாட்டுத்துறை அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் சபையின் தேர்தல் குழுவுக்கு பதிலாக புதிய தேர்தல் குழுவொன்று நடைபெறவுள்ள வருடாந்த பொதுக் கூட்டத்தில் நியமிக்கப்படவுள்ளது என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

<<Related News>>