(Kailaimai Nagulaswara Temple Gateway damaged lightning impact)
யாழ்ப்பாண குடாநாட்டில் இன்று நண்பகல் பரவலாகப் பொழிந்த இடியுடன் கூடிய மழையின் போது, கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய நுழைவாயிற் கோபுரத்தின் ஜாலிகள் மின்னல் தாக்கத்தால் சேதமடைந்தன.
கோபுரத்தின் வர்ணப்பூச்சு வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாக்க கோபுர கலசங்களில் வரகு தானியம் இடப்படுகின்றது.
எனினும், நகுலேஸ்வரம் ஆலய கோபுரத்தின் சீரமைப்பு பணிகள் இடம்பெறுவதால் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை.
அதனால் மின்னல் தாக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, குடாநாட்டில் நேற்றும் இரண்டு இடங்களில் மின்னல் தாக்கத்தால் 2 தென்னை மரங்களில் தீப் பிடித்ததுடன், வீடு ஒன்றின் மின் இணைப்பு பழுதடைந்தது.
அத்துடன், சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணனி ஆய்வு கூட மின்மானியும் இன்று மின்னல் தாக்கத்தால் தீப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
(Kailaimai Nagulaswara Temple Gateway damaged lightning impact)
More Tamil News
- மண்டைதீவில் மக்களின் காணியை விட்டு கடற்படையினர் வெளியேற வேண்டும்
- யாழில் இடம்பெற்ற கோரச் சம்பவம்; தந்தையும் மகனும் பலி
- மஹிந்த தலைமையில் பிற்பகல் முக்கிய சந்திப்பு; சூடுபிடிக்கும் தெற்கு அரசியல்
- 17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்
- 11,000 இலங்கை சிறுவர்கள் விற்பனை; அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலம்
- கள்ளக்காதல் ; வயோதிபர் மீது முறைப்பாடு; கத்தியால் குத்திய மகன்
- மஸ்கெலியாவில் மண்சரிவு; 30 பேர் இடம்பெயர்வு
- இதுவரை 13 பேர் பலி; தென் மாகாண மக்கள் அச்சத்தில்
- ‘பசுவதையை ஒழிப்போம் ; சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்
- சிறுமியை அறையில் பூட்டிவைத்து சித்திரவதை செய்த தாய்