தேடப்பட்ட எம்.எல்.ஏக்களின் ஒருவர் மீட்பு

0
553
alleged Congress MLAs found hotel information another person

alleged Congress MLAs found hotel information about another person

இந்திய கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ள நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் ஹோட்டலிலிருந்தது தெரியவந் துள்ளது. மற்றொரு நபர் குறித்த தகவல் இல்லை.

இந்திய உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. காலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு முடிந்தது. மீண்டும் அவை 3.30 மணிக்கு கூடுகிறது. இதற்கிடையில் இன்று மதியம் எடியூரப்பா பேரம் பேசியதாக காங்கிரஸ் தரப்பில் மற்றொரு ஓடியே வெளியிடப் பட்டுள்ளது.

இதில் எடியூரப்பாவே நேரடியாக ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் அமைச்சர் பதவி தருவதாகவும் 15 கோடி முதல் தவணையாக தருவதாகவும் மேலும் 2 பேரை தனக்கு ஆதரவளிக்க வலியுறுத்தி பேரம் பேசியுள்ளதாக கூறப்ப டுகிறது.

இதற்கிடையில் ரெட்டி சகோதரர்களால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், பிரதாப் பாட்டீல் ஆகியோர் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பெங்களூரிலுள்ள ஒரு ஹோட்டலில் இருவரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பொலிஸ் படையினர் அந்த ஹோட்டலில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆனந்த் சிங் ஹோட்டலிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஹோட்டலில் இருந்து வெளியே வந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில் பல்வேறு பரபரப்பு காட்சிகள் அரங்கேறி வருகிறது.

alleged Congress MLAs found hotel information another person

More Tamil News

 

  • TAMIL NEWS GROUP WEBSITES :