முடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..!

0
703
hair fall control healthy tips

(hair fall control healthy tips)

தலைமுடி உதிர்தல் பிரச்சினைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு, நாம் பயன்படுத்தும் தண்ணீர், கெமிக்கல் கலந்த ஷாம்பு பயன்படுத்துதல், தூசி மற்றும் மாசுக்கள் தலையில் படுதல் என காரணங்களை இடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் இவற்றையெல்லாம் மீறி, இயற்கையான முறையில் எப்படி முடி உதிர்தலைத் தடுக்க முடியும்? அதோடு முடியை பளபளப்பாகவும் நீண்டு வளரவும் செய்ய முடியும்.

கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும்.

சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள். எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.

தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். ஆகவே மறுநாள் காலையில் ஏதாவது விழா என்றால் முதல் நாள் மாலையில் கூந்தலை எப்போதும் போல் ஷாம்பு மற்றும் சீயக்காய் வைத்து அலசி விடவும். அடுத்தநாள் கூந்தலை அலசி, துடைத்து விட்டு அலங்காரம் செய்தால் கூந்தல் பளிச்சென இருக்கும். முகமும் தோற்றப் பொலிவுடன் அனைவரையும் கவரும்.

அழகு நிலையங்களுக்கு சென்று தலை முடியை கலரிங் செய்து விட்டு, ஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில் உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும். இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர், தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும். இதனால் கூந்தல் பளபளப்பாகும்.

TAGS : hair fall control healthy tips,

<<MORE POSTS>>

மூலிகையாக பயன்படும் காசினிக் கீரை

ஆண்களின் உடற்பயிற்சி சார்ந்த சுகாதாரம்

முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை கட்டுப்படுத்தி முகப்பருக்கள் வராமல் தடுக்கும் வேப்பிலை

 

<<VISIT OUR OTHER SITES>>

http:cinemaulagam.com

http:technotamil.com

http://tamilgossip.com/

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/