இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரை மணலில் பதுக்கி வைத்திருந்த 50 இலட்சம் மதிப்புள்ள கஞ்சாவை கீயூபிரிவு பொலிஸார் பறிமுதல் செய்ததுடன், கடத்தல்காரர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர். (50 million worth cannabis confiscated Sri Lanka)
சீனியப்ப தர்ஹா கடற்கரை மணலில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 50 இலட்சம் மதிப்புள்ள கேரளா கஞ்சா கீயூபிரிவு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே சீனியப்ப தர்ஹா கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கேரளா கஞ்சா கடத்தவிருப்பதாக கீயூபிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, இராமேஸ்வரம் துணை கண்காணிப்பாளர் மகேஸ் தலைமையில் கடற்கரை பகுதிகளில் பொலிஸார் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.
இதன்போது, கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த முருகன், ஜெயகணேஷ், கீத்தீஸ்வரன் ஆகிய மூவரைப் பிடித்து விசாரணை செய்தபோது இவர்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக சீனியப்பா தற்ஹா கடற்கரை மணலில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அப்பகுதியை தோண்டிய பொலிஸார் 152 கஞ்சா பொதிகளை கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் மொத்தமாக 304 கிலோ கிராம் என்றும் இதனை கைப்பற்றிய பொலிஸார் கடத்தல்காரர்கள் மூவரையும் கைதுசெய்து மண்டபம் பொலிஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கேரளா கஞ்சாவின் சர்வதேச மதிப்பு 50 இலட்சம் ரூபா என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலமாக இராமநாதபுரம் கடலோரப் பகுதிகளில் இருந்து போதைப் பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
குறிப்பாக இந்த வாரத்தில் 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள கேரளா கஞ்சா மற்றும் 50 இலட்சம் மதிப்பிலான கடல் குதிரைகள் தமிழக மற்றும் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு அனுமதி
- விகாரையின் உருவம் பதிக்கப்பட்ட ஆடையினால் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
- அச்சுவேலியில் கம்பிகள், பொல்லுகளுடன் தொடரும் இளைஞர்களின் அட்டகாசம்
- சட்டவிரோத மதுபான வியாபாரிகளை கைதுசெய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை
- மஸ்கெலியா வைத்தியசாலை நோயாளர்கள் பசி, பட்டினியுடன் வீடு திரும்பும் அவலநிலை
- ஹஜ் யாத்திரிகளிடம் பண மோசடி; நீதிமன்றில் வழக்கு தொடர தீர்மானம்
- நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறுநீர் சோதனை செய்ய வேண்டும்
- அபிவிருத்தி உத்தியோகத்தர் கொலை; பெண் கைது
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; 50 million worth cannabis confiscated Sri Lanka