எகிப்தில் கொலைச்சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய 18 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 31 person death penalty Egypt court world Tamil news latest
எகிப்து நாட்டில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும் பாதுகாவலரையும்; படுகொலை செய்ததாக் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நைல் நதி நகரமான எல் ஜகாஜிக்கில் உள்ள கிரிமினல் கோர்ட்டு விசாரித்தது.
கொல்லப்பட்ட இருவரும் உயிரிழப்பதற்கு முன்பாக துப்பாக்கி குண்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்ததாகவும் அவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட 18 பேரை தாங்கள் புலனாய்வு செய்து கண்டறிந்ததாகவும் போலீசார் நீதிமன்றில் சாட்சியம் கூறினர்.
விசாரணை முடிவில் அந்த 18 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய எல் ஜகாஜிக் கோர்ட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இதே போன்று அங்கு உள்ள மற்றொரு நகரமான இஸ்மாய்லியாவில் சிறையில் இருந்து தப்பிய மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து அங்குள்ள கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தண்டிக்கப்பட்ட 13 பேரும் 2016-ம் ஆண்டு சிறையில் இருந்து தப்பியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இவ்விரு வழக்குகளிலும் தண்டிக்கப்பட்டவர்கள் தங்கள் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
31 person death penalty Egypt court world Tamil news latest
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சிறையில் அமீத் வீரசிங்க உண்ணாவிரதப் போராட்டம்
- விஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்
- பணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது
- மௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்
- யாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு
- பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com