(29 years Old Girl Death Germany)
ஜெர்மனியில் வசந்தகால பாரம்பரிய கொண்டாட்டத்துக்காக நடப்பட்டிருந்த கம்பம் கீழே விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Wettelsheim கிராமத்தில் திங்கட்கிழமை மதிய நேரத்தில் அவ்வழியே சென்ற 29 வயதான பெண் மீது பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நடப்பட்டிருந்த கம்பம் சரிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அதேபோல இச்சம்பவத்தில் மூன்று வயது குழந்தை ஒன்றும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியாத நிலையில், கடந்த திங்கட்கிழமை ஜெர்மனியில் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக இந்த கம்பம் சரிந்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
இந்தாண்டு கம்பம் கீழே விழுந்ததால் ஏற்பட்டுள்ள இரண்டாவது மரணம் இதுவாகும்.
ஏற்கனவே Rhineland-Palatinate மாகாணத்தில் சில நாட்களுக்கு முன்னர் கம்பம் கீழே விழுந்ததில் 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான் என அந்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
நூற்றாண்டுகளுக்கு மேலாக மே தினத்தன்று வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக அன்றைய தினம் மாலை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கம்பம் ஜேர்மனியில் நடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
<<தமிழ் நியூஸ் தளத்தில் அதிகமாக வாசிக்கப்பட்ட செய்திகள்>>
ஜெர்மனியில் கடுமையான இடியுடன் கூடிய மழை…!
சிரங்கு பிரச்சினையால் அவதிப்படும் ஜேர்மனி வாசிகள்…!