சச்சினின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து வீரர்

0
36

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அரிய சாதனை ஒன்றை ஏற்படுத்திய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையையும் முறியடித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 15 பந்துகளில் 23 ஓட்டங்களை எடுத்திருந்த போது இந்த சாதனைக்கு அவர் சொந்தக்காரரானார்.

இதன்மூலம் அவர் டெஸ்ட் போட்டி ஒன்றில் நான்காவது இன்னிங்ஸில் மட்டும் அதிக ஓட்டங்களை சேர்த்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்ஸ்களில் மட்டும் 1625 ஓட்டங்களை பெற்றிருந்தார். சச்சின் டெண்டுல்கர் 60 இன்னிங்ஸ்களிலேயே 1625 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

எனினும் அந்த சாதனையை முறியடித்திருக்கும் ஜோ ரூட் 49 இன்னிங்ஸ்களில் 1630 ஓட்டங்களை பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளின் கடைசி இன்னிங்ஸில் ஓட்டங்களை சேர்ப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விடயமாகும்.

அதன்போது ஆடுகளம் சேதம் அடைந்து இருக்கும் என்பதால் துடுப்பாட்டம் செய்வது கடினமாக இருக்கும். இந்த சூழ்நிலையில் ஜோ ரூட் செய்துள்ள இந்த சாதனை வரலாற்று சிறப்புமிக்க சாதனையாக மாறி உள்ளது.

மேலும் தனது 150 வது டெஸ்ட் போட்டியில் இந்த வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தி இருக்கிறார். இந்தநிலையில் ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கரின் அதிக டெஸ்ட் ஓட்டச் சாதனையை நெருங்கி வருகிறார். சச்சின் டெண்டுல்கர் 15,921 டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அதேநேரம் ஜோ ரூட் 12,777 ஓட்டங்களை இதுவரை பெற்றுள்ளார். எனவே ஜோ ரூட் இன்னும் 3144 ஓட்டங்களை பெற்றால் சச்சினின் சாதனையை சமன் செய்ய முடியும்.