இந்திய இளம் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு

0
59

இந்தியாவின் புனே நகரத்தில் உள்ள கார்வேர் மைதானத்தில் கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற கிரிகெட் போட்டியின் போது 35 வயதுடைய இந்திய கிரிக்கெட் வீரர் இம்ரான் படேல் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

போட்டியின் போது இம்ரான் படேல் தனது இடது கை மற்றும் மார்பில் வலி இருப்பதாக நடுவர்களிடம் கூறி பின்னர் மைதானத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி வீழ்ந்துள்ளார்.

கிரிகெட் போட்டியை நேரலையில் ஒளிபரப்பும் போது இந்த காட்சிகள் கமராவில் பதிவாகியுள்ளன. இதனையடுத்து இம்ரான் படேல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனமே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.