ரொறன்ரோவில் 4 மாத சிசுவை கொன்றதாக தாய் மீது குற்றச்சாட்டு

0
40

கனடாவின் ரொறன்ரோவில் நான்கு மாத சிசுவை கொலை செய்ததாக அதன் தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரொறன்ரோ பொலிஸார் இந்த பெண் மீது குறித்த கொலைக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

கடந்த வாரம் ரொறன்ரோவின் மிட்டவுன் பகுதியில் நான்கு மாத சிசுவொன்று கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

தனது நான்கு மாத குழந்தையை காணவில்லை என சிசுவின் தந்தை பொலிஸாரிடம் தொலைபேசி வழியாக முறைப்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் படுகாயமடைந்த நிலையில் கிடந்த சிசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 30 வயதான காரிஸா எட்வர்ட்ஸ் என்ற சிசுவின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பெண் மனித படுகொலையில் ஈடுபட்டதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். ரொறன்ரோவில் இந்த ஆண்டில் பதிவான 79ம் படுகொலைச் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.