கனடாவில் மனைவியைக் கொன்ற 81 வயது முதியவருக்கு தண்டனை

0
49

கனடாவில் மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் 81 வயதான முதியவர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை குறித்த நபர் கொலை செய்துள்ளார்.

தனது மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட முதியவருக்கு கியூபெக் நீதிமன்றம் பத்து ஆண்டுகளும் ஆறு மாதங்களும் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 81 வயதான கிலிஸ் பிரிசார்ட் என்ற நபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.

79 வயதான லிவிஸ்கியூ என்ற தனது மனைவியை பிரிசார்ட் கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளார். கோபத்தில் படுகொலை செய்யவில்லை எனவும் அன்பினால் இவ்வாறு கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.