மனைவியின் கை விரல்களை வெட்டி சித்திரவதை; குடும்ப தகராறில் நடந்த கொடுமை!

0
54

குடும்பத் தகராறில் தனது மனைவியின் கை விரல்களை வெட்டியெடுத்து சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் கணவன் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பதுளை, மீகஹகிவுல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய மனைவியே காயமடைந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக கோபமடைந்த கணவன் தனது மனைவியின் கை விரல்களை வெட்டி எடுத்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மனைவி மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.