பிழையாக 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவருக்கு 50 மில்லியன் நட்டஈடு

0
68

அமெரிக்காவில் கொலை குற்றச்சாட்டின் அடிப்படையில் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு 50 மில்லியன் டொலர்கள் நட்டஈடு வழங்கப்பட உள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு 19 வயதான சிக்காகோவைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக் கொன்றதாக மார்ஷல் பிரவுன் என்பவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

சிக்காகோ நகர நிர்வாகம் இவ்வாறு ஐம்பது மில்லியன் டொலர்களை வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகை நட்ட ஈடாக வழங்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவென தெரிவிக்கப்படுகிறது.

மார்ஷல் பிரவுன் என்ற 18 வயதாக இருந்த போது அவருக்கு நீதிமன்றம் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

எவ்வாறு எனினும் நீதிமன்றம் தவறாக தண்டனை விதிக்கப்பட்டதாக பின்னர் தெரிய வந்துள்ளது. 2008 ஆம் ஆண்டு முதல் பத்து ஆண்டுகள் பிரவுன் சிறைத்தண்டனை அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிழையாக தண்டிக்கப்பட்டதாகத் தெரிவித்து பிரவுன் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் மேன்முறையீடு செய்தீருந்தார். இந்த வழக்கு விசாரணைகளின் போது குறித்த நபர் தவறிழைக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைகளின் பின்னர் குறித்த நபருக்கு 50 மில்லியன் டொலர்கள் நட்டு ஈடு வழங்கப்பட வேண்டும் என ஜுரிகள் சபை அறிவித்துள்ளது.

பொலிஸார் போலியான சாட்சியங்களை சமர்ப்பித்து போலி வாக்குமூலங்களை சமர்ப்பித்து சந்தேக நபருக்கு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

30 மணித்தியாலங்களுக்கு மேல் உணவு எதனையும் வழங்காது உறங்க விடாது சித்திரவதை செய்து போலி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது. இறுதியில் தமக்கும் தமது குடும்பத்திற்கும் நீதி கிடைத்தது என பிரவுன் தெரிவித்துள்ளார்.