ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் புதிய ஜனாதிபதிக்கு, அவர் நியமிக்கப்பட்டு 10 முதல் 12 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 52 முதல் 66 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைப்பது ஜனாதிபதியின் விருப்பத்திற்கேற்ப மேற்கொள்ளப்படலாம். அல்லது தற்போதைய நாடாளுமன்ற ஆயுட்காலம் முடியும் வரை அதனை தொடரலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.