யாழ்ப்பாணம் வந்தார் நாமல்: நல்லை ஆதீனத்தை சந்தித்து ஆசியும் பெற்றார்

0
76

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பார் தம்பித்துரை ரஜீவ் ஏற்பாட்டில் இந்த தேர்தல் பரப்புரை கூட்டம் இடம்பெற்றது.

கூட்டத்தில் கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை நல்லை ஆதீன குரு முதல்வரையும் நாமல் ராஜபக்ச சந்தித்து ஆசிப் பெற்றுக்கொண்டார.

இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,

“நல்லை ஆதீன குரு முதல்வர் தேசிக ஞானசம்பந்த பிரம்மச்சாரிய சுவாமிகளை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. வலுவான ஒன்றுபட்ட எதிர்காலத்தை கட்டியெழுப்பும் நோக்கில் நாம் உழைக்கும்போது அவருடைய வழிகாட்டுதலையும் ஆசீர்வாதங்களையும் பெறுவது உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டது.” என குறிப்பிட்டுள்ளார்.