கோலாகலமாக இன்று ஆரம்பிக்கும் ஒலிம்பிக் போட்டிகள்: நூறு ஆண்டுகளை கடந்து பாரிஸில்

0
64

ஒலிம்பிக் வரலாற்றில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் கோலகமாக இலங்கை நேரப்படி இரவு 11 மணிக்கு இன்று ஆரம்பமாகின்றது. இம்முறை ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் இரண்டுமே பாரிஸில் இடம்பெறுகின்றமை இதன் விசேட அம்சமாகும்.

இதில் சுமார் 15,000 போட்டியாளர்கள் பங்கேற்பதுடன், 206 நாடுகள் ஒலிம்பிக் போட்டியிலும் 184 நாடுகள் பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்கின்றன.

இப்போட்டிகளை கண்டு கழிப்பதங்கான டிக்கெட்டுக்கள் ஒன்லைனில் விற்கப்படுவதோடு தற்போது வரை 1.3 கோடி டிக்கெட்டுக்கள் ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் 300 கோடி மக்களுக்கும் அதிகமானோர் இந்த போட்டியை தொலைக்காட்சி, சமூகவலைத்தளம் மற்றும் இணையத்தளத்திலும் பார்த்து மகிழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து ஒலிம்பிக் செல்லும் வீரர்கள்

பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தருஷி கருணாரத்ன, அருண தர்ஷன மற்றும் நதீஸா தில்ஷானி லேக்கம்கே ஆகிய மூவரும் கடந்த(24) நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றனர்.

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கு இலங்கையின் 6 வீர, வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளதுடன் நிச்சயமாக பதங்களை இவர்கள் சுவீகரிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இம்முறை இடம்பெறவுள்ள ஒரிம்பிக் போட்டிகள் வழமைக்கு மாறாக மைதானத்தில் ஆரம்பமாகாமல் பாரிஸ் ஈபிள் டவருக்கு அருகாமையிலிருந்து கோலாகலமாக ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

முதல்போட்டி

கோலாகலமான ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து முதல் போட்டியாக 10மீற்றர் ஏர் பிஸ்டல் பெண்கள் போட்டிக்கு முந்தைய பயிற்சி இடம்பெறும். அதனைத் தொடர்ந்து 10மீற்றர் ஏர் பிஸ்டல் ஆண்கள் போட்டிக்கு முந்தைய பயிற்சி இடம்பெறவுள்ளது.