தேசபந்து தென்னக்கோனுக்கு வழங்கிய தடை உத்தரவு: ரணிலுக்குச் சட்டம் புகட்டிய சட்டத்தரணிகள்

0
64

உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டது இடைக்கால தடை உத்தரவு மாத்திரமே என்பதால் பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவுக்கு சட்ட ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகாத ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிக்கு பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியாது என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளை மேற்கொள்வதில் இடையூறு மாத்திரமே விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த காரணத்தினால் தொடர்பிலான சட்ட சிக்கல்களை தீர்க்கும் வரையில் பொலிஸ்மா அதிபர் பதவி அவ்வாறே இருக்கும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பொலிஸ்மா அதிபர் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய அரசாங்கத்தின் பதிலை பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று காலை நாடாளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

பிரதமர் நாடாளுமன்றத்தில் நடத்தும் உரையில் பல சர்ச்சைக்குரிய விடயங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், பொலிஸ்மா அதிபருக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதமர் இன்று அறிவிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.