உடலுடன் ஒட்டியிருக்கும் மினி டொக்டர்: ஆரோக்கியத்தை கண்காணிக்கும் மோதிரம் அறிமுகம்

0
23

தற்பொழுதெல்லாம் நமது உடல் நலம் எவ்வாறு இருக்கிறது என்பதை பரிசோதித்துக் கொள்ள மருத்துவரை நாட வேண்டிய தேவை குறைந்துள்ளது.

காரணம் நமது இதயத்துடிப்பு சீராக இருக்கிறதா? இரத்த அழுத்தம் எப்படி இருக்கிறது என்பவற்றை நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள், கைக்கடிகாரங்களே காட்டிக் கொடுத்து விடுகின்றன.

தற்போது அதற்கும் ஒரு படி மேலே சென்று தென் கொரிய இலத்திரனியல் நிறுவனமான செம்சங், கேலரி மோதிரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த மோதிரத்தை கையில் அணியும் பொழுது உங்களது இதயத் துடிப்பு சீராக இருக்கிறதா? உடல் வெப்பநிலை அளவாக இருக்கிறதா? சரியான நேரத்துக்கு உறங்குகிறீர்களா? ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடந்துள்ளீர்கள்? எவ்வளவு நேரம் பணியாற்றியுள்ளீர்கள் போன்றவற்றை இந்த மோதிரம் கண்காணிக்கும்.

இந்த மோதிரம் எனர்ஜி ஸ்கோர், வெல்னஸ் டிப்ஸ் ஆகிய AI அம்சங்களை உள்ளடக்கியது. 5 முதல் 13 வரையிலான விரல் அளவுகளுக்கு இந்த மோதிரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு 8MB வரையில் மெமரியைக் கொண்டுள்ளது.

இந்த மோதிரத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் ஏழு நாட்கள் வரையில் வேலை செய்யும். தண்ணீர் பட்டாலும் எந்த பாதிப்பும் இருக்காது.