அனுரவின் 14 வெளிநாட்டு பயணங்கள்: 70 மில்லியன் செலவு – உண்மையா?

0
24

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க கடந்த காலங்களில் உலகில் பல்வேறு நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டிருந்தார்.

தேசிய மக்கள் சக்திக்கு புலம்பெயர் தமிழர்களிடம் ஆதரவு திரட்டும் வகையில் அவரது இந்தப் பயணங்கள் அமைந்திருற்தன. கடந்த 20 மாதங்களில் அவர் 14 முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

இதற்கான செலவுகள் தேசிய மக்கள் சக்தியால் மேற்கொள்ளப்பட்டதா அல்லது அக்கட்சிக்கு ஆதரவான புலம்பெயர் இலங்கையர்களால் மேற்கொள்ளப்பட்டதா எனத் அக்கட்சி எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் அனுரவின் 14 வெளிநாட்டு பயணங்களுக்காக 70 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி விவாதமொன்றில் அவர் இந்தக் கருத்தை கூறியுள்ளார். இந்த பயணங்கள் அனைத்தும் சொகுசு வணிக டிக்கட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தப் பயணங்களின் போது அனுரகுமார திஸாநாயக்க எவ்வளவு உதவித் தொகையை பெற்றுக்கொண்டுள்ளார் என்றோ அல்லது அந்த உதவித் தொகை நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட முறை பற்றியோ இதுவரை எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்தியாவுக்கு அவர் மேற்கொண்டிருந்த பயணம் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் இடம்பெற்றதாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.