ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் தயார்: எதிர்க் கட்சிகளுக்குதான் விருப்பம் இல்லை – கஞ்சன

0
70

ஜனாதிபதித் தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை. மாறாக தேர்தலை பிற்போடும் தேவை எதிர்க்கட்சிகளுக்கே உள்ளாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுவரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய சஜித் பிரேமதாச,

ஜனாதிபதித் தேர்தலை உரிய காலப்பகுதியில் நடத்துமாறு எதிர்க்கட்சிகள் கோருகின்றன. தேர்தலை நடத்துவதற்காக அரச தரப்பில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுத் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் நீதிமன்றில் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறுவருடங்கள் அல்ல ஐந்து வருடங்கள்தான் என கூறியிருந்தார். நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளது. இவ்வாறான சூழலில் நாட்டு மக்களது பிரச்சினைகளை வேறு பக்கம் திசை திருப்பும் நோக்கில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயத்தை கையில் எடுத்துள்ளனர்.

அரசாங்கம் தேர்தலை பிற்போட நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. மாறாக எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் செயல்படும் தொழிற்சங்கங்களே போராட்டங்கள் ஊடாக தேர்தலை நடத்துவதற்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றன.

தேர்தல் நடைபெற கிராம சேவகர்கள், தபால் திணைக்களம் மற்றும் போக்குவரத்து துறையினரின் பங்களிப்பு அவசியமாகும். இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் தேர்தல் நடத்துவதில் பாதிப்புகள் ஏற்படலாம்.

தேர்தல்கள் ஆணைக்குழுவை சந்தித்த பெப்ரல் அமைப்பு, ஜனாதிபதித் தேர்தலை நடத்த நிதி ஒதுக்கீடுகள் முதல் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியதாக தெரிவித்துள்ளது.

சட்டத்தில் சிக்கல்கள் இல்லாத சூழலில் அரசாங்கமும், தேர்தல்கள் ஆணைக்குழுவும், தேர்தலை நடத்த தயார் நிலையில் இருக்கும் சூழலில் எதிர்க்கட்சிகள் எதற்காக எவ்வாறான பிரேரணைகளை கொண்டுவருகின்றன?.

மக்களின் பிரச்சினைகளை மறைத்து தேர்தல் தொடர்பான எண்ணங்களை உருவாக்குவதே இவர்களது நோக்கம். தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது. தேர்தல்களை பிற்போட நாங்கள் கை உயர்த்த மாட்டோம். எதிர்க்கட்சியினருக்கு தேர்தல்களை பிற்போட கை உயர்த்தி பலக்கம் உள்ளது.” என்றார்.