கிளப் வசந்த் கொலை விவகாரம்: மனைவியிடமிருந்து அனுமதியற்ற துப்பாக்கி

0
76

பிரான்ஸில் தலைமறைவாகி இருந்த இலங்கைத்தீவின் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பலின் தலைவருமான கஞ்சிபாணி இம்ரானின் கட்டளைக்கிணங்கியே அஹூங்கல்லை லொகு பெட்டீ மூலம் க்ளப் வசந்தவை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கஞ்சிபாணி இம்ரான் மற்றும் க்ளப் வசந்த இடையே காணப்பட்ட பணக் கொடுக்கல் வாங்கல் சிக்கலே இந்த கொலைக்கான காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

இதற்குச் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த மாகந்துர மதுஷ் எனப்படும் பாதாள உலகக் குழு தலைவர் மூலம் க்ளப் வசந்தவுக்கு வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படும் அதிகளவிலான பணத்தொகையின் ஒரு பகுதியை கோரி கஞ்கிபாணி இம்ரான் உள்ளிட்ட பாதாள உலகக் குழு தலைவர்வரகளினால் க்ளப் வசந்தவுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தன.

எனினும், க்ளப் வசந்த குறித்தத் தொகையை வழங்க தவறியதால் இருவருக்குமிடையில் விவாதங்களும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

க்ளப் வசந்தவின் கொலைக்கு முக்கிய காரணியாக இந்த பணக் கொடுக்கல் வாங்கல் அமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாகந்துர மதுஷ் எனப்படும் பாதாள உலகக் குழு தலைவரின் முக்கிய அடியாட்களான கஞ்சிபாணி இம்ரான், அஹூங்கல்லை லொகு பெட்டீ , பொடி பெட்டீ , அஹூங்கல்லை சஞ்சீவ உள்ளிட்டவர்கள் டுபாயில் தலைமறைவாக இருந்து இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அஹூங்கல்லை லொகு பெட்டீ மூலமே க்ளப் வசந்தவை கொலை செய்ய அத்துருகிரிய டெட்டூ நிறுவன உரிமையாளர் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளார்.

இவ்வாறு அத்துருகிரிய டெட்டூ நிறுவனத்தின் திறப்பு விழாவுக்கு க்ளப் வசந்தவை அழைக்குமாறு அதன் உரிமையாளருக்கு கட்டளையிடப்பட்டுள்ளது.

அதற்காக, டெ்டடூ நிலைய உரிமையாளரின் வங்கிக் கணக்குக்கு 16 இலட்சம் ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன் இரு முறைகளில் 10 இலட்சம் மற்றும் 6 இலட்சம் என்ற அடிப்படையில் வைப்பிலிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

க்ளப் வசந்தவை தனது நிலைய திறப்பிற்கு அழைக்குமாறு மாத்திரம் கட்டளையிடப்பட்டதாகவும் அவரை கொலை செய்வது தொடர்பில் தனக்கு எந்தவித தகவலும் தெரியவில்லை எனவும் டெட்டூ நிலைய உரிமையாளரிடம் நேற்று வரையில் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், க்ளப் வசந்தவின் கொலை தொடர்பில் 07 சந்தேகநபர்கள் நுகேகொடை குற்றப் புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுள் கொலைக்காக வாகனங்களை வழங்கியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.