எல்விஸ் பிரெஸ்லி இன் காலணி ஏலத்தில்: 150 ஆயிரம் டாலர் வரை விற்பனை செய்யப்படும் என எதிர்வுகூறல்

0
76

பிரபல பாடகரும் நடிகருமான எல்விஸ் பிரெஸ்லியின் ஒரு ஜோடி நீல நிற காலணி ஏலத்தில் விற்கப்படவுள்ளது. பிரித்தானிய ஏல விற்பனை நிறுவனமான ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் மூலம் இந்த காலணி ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

குறித்த காலணி 70.000 அமெரிக்க டொலர் முதல் 150.000 டொலர் வரை விற்பனை செய்யப்படலாம் என யூகிக்கப்படுகிறது. 1956 ஆம் ஆண்டில் எல்விஸ் பிரெஸ்லி தமது முதல் அல்பத்தில் அணிந்திருந்த காலணி இதுவென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எல்விஸ் இராணுவத்தில் சேர்வதற்கு முன்பாக 1958 ஆன் ஆண்டு தமது நண்பரான ஆலன் ஃபோர்டாஸுக்கு அந்தக் காலணியை பரிசளித்ததாக கூறப்படுகிறது.

இந்தக் காலணி எல்விஸ் பிரெஸ்லியுடையது என்பதனை அருங்காட்சியகத்தில் இருந்து இரண்டு கையொப்பமிடப்பட்ட நம்பகத்தன்மை கடிதங்கள் மற்றும் ப்ரெஸ்லியின் நெருங்கிய நண்பரின் கடிதமும் உறுதிப்படுத்துகின்றன. இந்த நிலையில் குறித்த காலணி நாளை (28) நேரலையில் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.