முட்டை விற்று ஹெலிகாப்டர் வாங்கிய தொழிலதிபர்: கலந்துரையாடலில் வெளியான தகவல்

0
131

முட்டை உற்பத்தியில் ஈடுபடாத தொழிலதிபர் ஒருவர் முட்டைகளை சேகரித்து சேமித்து வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து கிடைக்கும் வருமானத்தில் ஹெலிகாப்டர் வாங்கியுள்ளதாக செய்தியொன்று பதிவாகியுள்ளது.

தற்போதைய சந்தையில் முட்டைக்கு நேரடி விலைக் கட்டுப்பாடு இல்லாத சூழலில் ஒரு முட்டை வெவ்வேறு விலையில் விற்கப்படும் நிலையில் தற்போது முட்டை 47 ரூபாய் முதல் 52 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. பல்பொருள் அங்காடிகளில் பொதி செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விற்பனை விலை 60-65 ரூபாவாக காணப்படுகிறது.

முட்டை விலை அதிகரிப்பு மற்றும் முறையான விலைக் கட்டுப்பாடு இல்லாமை தொடர்பில் கடந்த 25 ஆம் திகதி விவசாய அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கோழித் தீவனச் செலவு உட்பட முட்டையின் உற்பத்திச் செலவு 31 ரூபாவாகும் எனத் தெரியவந்துள்ளது.

இந்த கலந்துரையாடலின் போதே முட்டைகளை மொத்தமாக சேமித்து வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் தொழிலதிபர் ஒருவர் ஹெலிகாப்டர் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.