பிரிட்டிஷ் தேர்தல் களத்தில் முதல் AI வேட்பாளர்

0
41

பிரித்தானியாவில் ஜூலை 4ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு AI வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

59 வயதான ஸ்டீவ் எண்டகோர்ட் என்ற தொழிலதிபரே AI தொழில்நுட்பத்தின் மூலம் தன்னை வேட்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளார்.

AI வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு AI வேட்பாளராக போட்டியிடுபவர் சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, ஸ்டீவ் எண்டாகாட் தன்னைப் பற்றி AI உருவாக்கிய படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

எவ்வாறாயினும், AI ஸ்டீவ் தேர்தலில் வெற்றி பெற்றால், AI அல்ல ஸ்டீவ் எண்டாகோட் தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்நாட்டு அரசாங்கம் பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கு மேலும் AI வேட்பாளர்களை நியமிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.