தலையில் முண்டாசு, மூக்கில் மூக்குத்தி: மிரட்டும் லுக்கில் விக்ரம் வெளியிட்ட புகைப்படம்

0
62

வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடிப்பதில் நடிகர் விக்ரமுக்கு என்றுமே முதலிடம்தான். இவ்வாறிருக்க, பா.ரஞ்சித் இயக்கத்தில் தற்போது தங்கலான் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். நடிகர் பசுபதி இத் திரைப்படத்தில் வில்லன்.

இத் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் நிறைவுற்று, தமிழ், மலையாளம்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படத்தில் தலையில் முண்டாசு,மூக்குத்தி என பார்க்கவே மிகவும் பயங்கரமாக இருக்கிறார். அத்துடன் எக்ஸைடிங் டைம்ஸ் என இந்தப் புகைப்படத்துக்கு தலைப்பிட்டுள்ளார்.