ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்த வினோத உயிரினம்… அது அது ஏலியனா?

0
55

பசிபிக் பெருங்கடலில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள புதிய உயிரினம் மனிதர்களால் வர்ணிக்கப்படும் ஏலியன் போன்ற தோற்றத்தில் உள்ளதாகவும், தற்போது அது அறிவியல் உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பசிபிக் கடல் பிரதேசத்தில் இதற்கு முன் யாரும் பார்த்திராத இந்த வினோத உயிரினம் வாழ்கிறது. கடலின் 11,480 முதல் 18,045 அடியாழத்தில் அபிசோபெலாஜிக் என்று அழைக்கப்படும் கடல் மட்டத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இந்த உயிரினம் கண்ணாடியின் தன்மையுடைய கடல் குக்கும்பர் என்று ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இதற்கு ‘Unicumber’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த உயிரினம் மிகப்பெரிய உடல் அமைப்பை கொண்டுள்ளது. கடலின் தரைமட்டத்தில் உள்ள இயற்க்கைக் குப்பைகளை உண்டு இவை உயிர்வாழ்கின்றன. 

அதாவது இவை கடலின் வேக்கும் கிளீனர் போல் செயல்படுகின்றன. இதுமட்டுமின்றி கடல் பன்றி என்று குறிப்பிடப்படும் ஒரு உயிரினமும் அப்பகுதியில் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை தொடர்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் ஆய்வாளர்கள், பசிபிக் கடல் பிரதேசத்தின் அடியாழத்தில் வாழும் 10 இல் 9 உயிரினங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படாமலேயே உள்ளன என்று தெரிவிக்கின்றனர்.