யாழில் வளர்ப்பு நாயுடன் இரவில் தூங்கும் மாணவியை தாக்கிய தந்தை; அதிர்ச்சி முடிவெடுத்த மகள்

0
38

யாழ்ப்பாண பகுதியொன்றில் தனது வளர்ப்பு நாயுடன் இரவில் கட்டிலில் கட்டிப் பிடித்து துாங்கும் செயற்பாட்டை கொண்ட பல்கலைக்கழக மாணவி மீது தந்தை தாக்குதல் நடாத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.

கொழும்பில் இருந்து வந்த தந்தையின் சகோதரி மற்றும் உறவுகள் வீட்டில் தங்கியிருந்த போதே தந்தை மாணவி மீது தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.

இச்சம்பவம் யாழ்ப்பாணம் – அரியாலைப் பகுதியில் இரவேளையில் இடம்பெற்றுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக குறித்த மாணவி தனது வீட்டில் உயர்ரக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். க.பொ.த உயர்தர பரீட்சைக்கு படிக்கும் போதே அந்த நாயுடன் இரவில் துாங்குவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

இது தொடர்பாக அரச அதிகாரியான தந்தை பல தடவைகள் மாணவியை கண்டித்தும் மாணவி அதைப் பொருட்படுத்தாது நாயுடன் இரவில் துாங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் திருமண நிகழ்வு ஒன்றிற்காக கொழும்பில் இருந்து மாணவியின் தந்தையின் சகோதரி குடும்பம் மாணவி வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

இவ்வாறு தங்கியிருந்த போது மாணவி நாயுடன் துாங்குவது தொடர்பாக தந்தையின் சகோதரியும் மாணவியை கண்டித்ததாக தெரியவருகின்றது. இதனால் தந்தையின் சகோதரிக்கும் மாணவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர் தந்தையின் சகோதரி மற்றும் அவரது உறவுகள் வீட்டை விட்டு வெளியேறி இன்னொரு உறவினர் வீட்டில் தங்க ஆயத்தமாகினர்.

அலுவலகத்தால் வந்த தந்தை தனது சகோதரியுடன் தனது மகள் நாய் தொடர்பான செயற்பாட்டால் முரண்பட்டது தொடர்பாக அறிந்து தனது மகளை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

தான் பிறந்ததிலிருந்து ஒரு தடவையேனும் தன்னை கோபமாக தாக்காத தந்தை தன்னைத் தாக்கியதால் மகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின்னர் உடனடியாகவே வீட்டு அறையை மூடி துாக்கில் தொங்க முற்பட்டதாகத் தெரியவருகின்றது.

வீட்டில் இருந்த தந்தையின் உறவுகள் மற்றும் அயலவர்கள் சேர்ந்து கதவை உடைத்து துாக்கில் தொங்கிய நிலையில், உயிர் ஆபத்தற்று கழுத்து பகுதி சிறிது வீங்கிய நிலையில் மாணவியை மீட்டுள்ளனர்.

பறந்து கொண்டிருந்த விமானத்தில் சுற்றித்திரிந்த பூனை… வைரலாகும் காட்சிகள்!

மாணவி தற்போது தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

2001 ம் ஆண்டளவில் மாணவி பிறந்த போது மாணவியின் தாய் இரத்த உயரழுத்தம் காரணமாக மாணவி பிறந்த அன்றே இறந்துவிட்டதாகத் தெரியவருகின்றது.

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&us_privacy=1—&gpp_sid=-1&client=ca-pub-3603232726550318&output=html&h=280&adk=2659675596&adf=2123789686&pi=t.aa~a.3987527503~i.38~rp.4&w=674&abgtt=5&fwrn=4&fwrnh=100&lmt=1718078650&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2445088797&ad_type=text_image&format=674×280&url=https%3A%2F%2Fjvpnews.com%2Farticle%2Ffather-attacked-daughter-sleeping-with-dog-jaffna-1718056579&fwr=0&pra=3&rh=169&rw=674&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTUuMC4wIiwieDg2IiwiIiwiMTIzLjAuNjMxMi4xMDYiLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siR29vZ2xlIENocm9tZSIsIjEyMy4wLjYzMTIuMTA2Il0sWyJOb3Q6QS1CcmFuZCIsIjguMC4wLjAiXSxbIkNocm9taXVtIiwiMTIzLjAuNjMxMi4xMDYiXV0sMF0.&dt=1718078609102&bpp=3&bdt=53091&idt=3&shv=r20240605&mjsv=m202406060101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Db8ac4456f501f204%3AT%3D1710930053%3ART%3D1718078543%3AS%3DALNI_MaYpS0Vh40QiC95VCtSq-qnAmKpkQ&gpic=UID%3D00000d4bece02f71%3AT%3D1710930053%3ART%3D1718078543%3AS%3DALNI_MYZCf4WSHJRGCveSAIJ8nbu0QjlRQ&eo_id_str=ID%3Dcbff0014defd45b9%3AT%3D1710930053%3ART%3D1718078543%3AS%3DAA-AfjZ8kYX62FXMymaeeQoYhqqg&prev_fmts=0x0%2C336x0%2C674x280&nras=3&correlator=8341188362258&frm=20&pv=1&ga_vid=53535475.1710929986&ga_sid=1718078608&ga_hid=369906272&ga_fc=1&u_tz=330&u_his=1&u_h=768&u_w=1366&u_ah=720&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=170&ady=3930&biw=1349&bih=599&scr_x=0&scr_y=1560&eid=44759875%2C44759926%2C44759837%2C31084128%2C44795922%2C95334511%2C95334528%2C95334564%2C95334573%2C95334579%2C95334820%2C95334052%2C31078663%2C31078665%2C31078668%2C31078670&oid=2&pvsid=3351862017150779&tmod=42233370&uas=3&nvt=1&ref=https%3A%2F%2Fjvpnews.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C720%2C1366%2C599&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=6&uci=a!6&btvi=3&fsb=1&dtd=41696

அதன் பின்னர் மாணவியை வளர்ப்பதற்காக தந்தை மறுதிருமணம் செய்யவில்லை எனவும் தனது தாயுடன் சேர்ந்து தனது மகளை தந்தை வளர்த்து வந்ததாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது 53 வயதான தந்தை யாழில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் அதிகாரியாகக் கடமையாற்றி வருகின்றார். அவரது 78 வயதான தாயும் ஓய்வு பெற்ற அரச அதிகாரி என தெரியவருகின்றது.