நயனை தூக்கிய கொஞ்சிய விக்கி: 2 ஆம் ஆண்டு திருமண நாளில் வெளியிட்ட வீடியோ

0
31

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களுக்கு உயிர், உலக் என்று இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் அவர்ளுக்கு இரண்டாவது ஆண்டு திருமண நாள்.

இந்த திருமண நாளை வெளிநாட்டில் கொண்டாடியுள்ளனர். வெளிநாட்டில் அவரது மகன்களுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை நயன்தாரா வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நயன்தாராவை விக்னேஷ் சிவன், தூக்கி விளையாடி, பின் இருவரும் ஒருவரையொருவர் ஆரத் தழுவும் வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

நயன் – விக்கி இருவரும் அவர்களது இல்லற வாழ்க்கையை இனிமையாக கொண்டாடுவது பார்ப்பவர்களையும் மகிழ்விப்பதாக உள்ளது.