ஜீவன் தொண்டமானுக்கு இலங்கை பெருந்தோட்ட சங்கம் கண்டனம்: மக்களை தவறாக வழி நடத்தியதாக குற்றச்சாட்டு

0
52

நுவரெலியா, பீட்றூ தோட்டத்தில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நடவடிக்கை இலங்கை பெருந்தோட்ட சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கம் மற்றும் பொலிஸாரை பெருந்தோட்ட சங்கம் வலியுறுத்தியுள்ளது.

களனிவெளி தோட்டத்திக்குச் சொந்தமான நுவரெலியா பீட்றூ தோட்டத்தில் கடந்த மாதம் 30ஆம் திகதி நடைபெற்ற தொழிற்சங்க நடவடிக்கையில் தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் என்ற ரீதியில் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இந்நிலையில் அச்சுறுத்தல் தந்திரங்கள் மற்றும் சட்டத்தை புறக்கணிக்கும் அமைச்சரின் செயற்பாடுகள் பெருந்தோட்ட சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பெருந்தோட்ட சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

அமைச்சர் ஜீவன் தொண்டமானும் அவரது சகாக்களும் பீட்றூ தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்தனர். தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அவரது குழுவை நான்கு மணி நேரம் தடுத்து நிறுத்தினர்.

கோப்பிச் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் நடவடிக்கையை நிறுத்துமாறும் இடைநிறுத்தப்பட்ட தொழிலாளர்கள்உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தப்படாவிட்டால் தீ மூட்டுவதாக அச்சுறுத்தல் விடுத்தனர். அதற்கான காணொளி ஆதரங்கள் உள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. ஆனால் நிறுவனத்தின் நிர்வாகம் ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் நெறிமுறையைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியது.

இக்கட்டான சூழ்நிலையில்,களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ உயர் அதிகாரி அனுர வீரகோன் அமைதி காத்ததிற்கு பாராட்டப்படுகிறார்.

வன்முறை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) வருகையை எதிர்கொண்ட தோட்ட நிர்வாகம் பிரச்சினைகள் தீவிரமடைவதை தவிர்ப்பதற்கு அமைச்சரின் கோரிக்கைகளை தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டனர்.

மேலும், நிர்வாக உயர் அதிகாரியொருவர் அச்சுறுத்தலால் மன அழுத்தத்திற்கு உள்ளான நிலையில் வைத்திலையில் அனுமதிக்கப்பட்டார்.

பொய்யான தகவல்களைக் கூறி பொது மக்களை தவறாக வழி நடத்தியுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நீதி கிடைக்கும் வரை பொறுப்புக்கூறலுக்காக தொடர்ந்து வாதிடுவோம் என சங்கம் இலங்கை பெருந்தோட்ட சங்கம் அறிவித்துள்ளது.