கனடாவில் 107ம் பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி

0
44

 கனடாவில் பெண் ஒருவர் தனது 107ம் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளார். லேக்சோர் பகுதியைச் சேர்ந்த ஒல்கா வைற் என்ற பெண்ணே இவ்வாறு தனது 107ம் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமாயின் நம்மை நாமே நேசிக்க வேண்டும் எனவும் பராமரிக்க வேண்டுமெனவும் ஒல்கா தெரிவித்துள்ளார்.

சுத்தமாக காற்றை சுவாசிப்பதாகவும், நாள் தோறும் நாம் விரும்பும் செயற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும் குறறிப்பிட்டுள்ளார்.

1917ம் ஆண்டு உக்ரைனில் பிறந்த ஒல்கா, முதலாம் உலகப் போர் காலத்தில் கனடாவில் குடியேறியுள்ளார். 99 வயது வரையில் சொந்த வீட்டில் வாழ்ந்து வந்த ஒல்கா தற்பொழுது முதியோர் பராமரிப்பு நிலையமொன்றை தங்கியுள்ளார்.