4 வயது சிறுவன் தாக்கப்பட்ட காணொளி; பெண்கள் உட்பட மூவர் கைது!

0
63

4 வயது சிறுவன் தாக்கப்படும் காணொளி தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட மூவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இன்று புதன்கிழமை (05) அதிகாலை புல்மோட்டை அரிசிமலை பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான 45 வயதுடைய பிபிலே சமிந்த என்ற குகுல் சமிந்த என்பவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரு பெண்களுமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர்கள் வெலிஓயா கல்யாணபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் தாக்கப்பட்ட சிறுவன் பொலிஸாரின் பொறுப்பில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.