திருடச் சென்ற வீட்டில் ஏசியை போட்டு தூங்கிய திருடன்; சமூக வலைத்தளத்தில் வைரலாக தகவல்

0
81

இந்தியாவின் லக்னோவில் ஒரு மருத்துவர் வீட்டில் திருடுவதற்காக கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடன், திருட சென்ற அதே வீட்டில் குளிரூட்டியை வைத்து தூங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

இந்தியாவின் லக்னோவில் ஒரு மருத்துவர் வீட்டில் திருட வாய்ப்புக்காகக் காத்திருந்த திருடன், உரிமையாளர் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தான்.

திருட சென்ற திருடன் ஓய்வின்றி தூங்கிவிட்டதால், மறுநாள் காலை பொலிஸ் அதிகாரிகள் திருடனை எழுப்பி கைது செய்தனர். தான் குடிபோதையில் இருந்ததாகவும், மேற்படி வைத்தியரின் வீட்டின் கதவை உடைத்து, அங்கிருந்த பல பெறுமதியான பொருட்களைத் திருடி வெளியில் எடுத்துச் செல்வதற்கு தயாராக வைத்திருந்ததாகவும், மனமுடைந்த நிலையில் சிறிது நேரம் ஓய்வெடுக்க விரும்புவதாகவும் திருடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவரின் வீடு திறந்திருந்ததை அவதானித்து முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு இதையடுத்து மருத்துவர் வீட்டுக்குச் சென்ற பொலிஸ், தூங்கிக் கொண்டிருந்த திருடனை எழுப்பி கைது செய்தனர்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது மேலும் இதுபோன்ற பல சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளதாக உள்ளூர் பொலிஸ் தெரிவித்துள்ளனர்.