யாழ்ப்பாணத்தில் மோடியின் வெற்றிக் கொண்டாட்டம்: இனிப்புகள் மற்றும் பட்டாசு வெடித்து கொண்டாடிய சிவசேனா

0
50

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலாக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் வெற்றிக்கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, மோடியின் வெற்றியை இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகள் இணைந்து கொண்டாடியுள்ளன.

இதற்கான நிகழ்வு யாழ்.நகரிலுள்ள வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இதன்போது கற்பூரம் ஏற்றப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றதுடன் சிதறுதேங்காய்களும் உடைக்கப்பட்டன.

பின்னர் பொதுமக்களுக்கு மோதகம், லட்டு பரிமாறப்பட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசு கொழுத்தியும் வெற்றியினை கொண்டாடினர்.