மனித கடத்தலின் பின்னணியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்? வெளிவரும் தகவல்கள்

0
50

நாட்டில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் உள்ளிட்ட சுமார் ஆயிரம் இலங்கையர்கள் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட்டு வருவதாக அண்மை நாட்களாக தகவல் வெளியாகி வருகின்றன. அதில் பலர் போரில் உயிரிழந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இதுவரையில் 16 பேர் உயிரிழந்திருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்போது வரையில் காணாமல் போன மற்றும் விபத்துக்குள்ளாகியவர்கள் தொடர்பில் 411 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யா மனித கடத்தலின் பின்னணியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்?

ரஷ்யாவில் மனித கடத்தலுக்கு பிரதான நபராக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் சதுரங்க இலங்கையில் இருந்து தப்பியோடிய அதே நாளில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தலைமையிலான தூதுக்குழுவும் ரஷ்யாவிற்கு விஜயம் செய்திருந்த நிலையில் குறித்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் அங்கம் வகிப்பதாக தெரியவந்துள்ளது.

Zoom கூட்டங்கள் மூலம் ரஷ்யாவிற்கு இராணுவ வீரர்களை இணைக்கும் போது ​​சதுரங்க தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் செயலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாக ரஷ்யாவில் நடைபெற்று வரும் போரில் இருந்து தப்பித்து இலங்கைக்கு முதலில் மீண்டு வந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் மனோஜ் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.