2024 T20 உலகக் கிண்ண கிரிக்கெட்: இலங்கையிடம் போராடி வென்ற தென் ஆப்பிரிக்கா!

0
112

2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்றையதினம் இடம்பெற்ற முதற் சுற்று போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டு வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணி வீழ்த்தியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக குசல் மெந்திஸ் 19 ஓட்டங்களையும், ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 16 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் வேகபந்து வீச்சாளர் என்ரிச் நோர்ட்ஜே அதிகப்படியாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து, 78 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

தென்னாபிரிக்கா அணி சார்பில் டி கொக் அதிகபட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.