அதிகாலையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, 24 பேர் காயம்!

0
76

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் நேற்றைய தினம் அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் , ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.