வடக்கு மாகாணத்திற்கு ஜனாதிபதி விஜயம்!

0
88

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில், 46 வருடங்களுக்கு பின்னர் புதிய மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (24) திறந்து வைத்துள்ளார்.

குறித்த திட்டத்திற்காக 942 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கிற்கு 3 நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில், உரித்து தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமங்களை வழங்கி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி விசேட அவதானம் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.