“கட் ஆன சிக்னல்..” ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்து.. உண்மையில் என்ன காரணம்!

0
49

தெஹ்ரான்: ஈரான் நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் அதிபர் ரைசி உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இந்த விபத்து குறித்த காரணம் இப்போது வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ஈரான் நாட்டின் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ஈரான் நாட்டின் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.

அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஈரான் அதிபர் ரைசி அங்கிருந்து திரும்பிய நிலையில், மலை பகுதியில் சென்ற போது சிக்னல் கட் ஆகியுள்ளது. கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த அதிகாரிகளால் ஹெலிகாப்டரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

விபத்து:

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்த உடன் மீட்புப் படையினர் அங்கு விரைந்தனர். பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகளில் ஈடுபட முடியவில்லை. மீட்புப் படையினர் நடந்து சென்றே முதலில் தேடும் பணிகளில் ஈடுபட்டனர்.. பல மணி நேரமாக இந்த தேடுதல் பணிகள் தொடர்ந்த நிலையில், நேற்று காலை தான் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்தில் சிக்கியது தெரியவந்தது. மேலும், அதில் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது. அவரது உடலும் மீட்கப்பட்டது.

அந்த ஹெலிகாப்டரில் பயணித்த அனைவருமே விபத்தில் கொல்லப்பட்டனர்.. ஈரான் அதிபருடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி, கிழக்கு அஜர்பைஜானுக்கான சுப்ரீம் லீடரின் பிரதிநிதி அயதுல்லா முகமது அலி அலே-ஹஷேம் உள்ளிட்ட பலரும் கொல்லப்பட்டனர். இதற்கிடையே இந்த விபத்திற்கான காரணம் இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு:

தாவது அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக ஈரான் அரசு ஊடகம் செய்தி தெரிவித்துள்ளது.. வடமேற்கு ஈரான் பகுதியில் ஜோல்பாவில் உள்ள மலைப் பகுதிகளில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி உள்ளது.. மோசமான வானிலைக்கு மத்தியில் பல மணி நேரம் மீட்புப் பணிகள் நடந்த நிலையில், விபத்தில் சிக்கிய விமான பாகங்கள் மீட்கப்பட்டன. இந்த விபத்தில் அனைவருமே கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஈரான் நாட்டின் அதிபர், வெளியுறவுத் துறை அமைச்சர் என இருவருமே இந்த விபத்தில் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஈரான் நாட்டின் துணை அதிபர் முகமது மொக்பர் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.. வெகு விரைவில் ஈரான் நாட்டிற்கு புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என்று அந்நாட்டின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனி உறுதியளித்துள்ளார்.

பெல் 212 ஹெலிகாப்டர்:

இந்த விபத்தில் சிக்கியது பெல் 212 ஹெலிகாப்டர் என்பது தெரிய வந்துள்ளது.. 1960களின் பிற்பகுதியில் கனடா நாட்டின் ராணுவத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர், 15 இருக்கைகள் கொண்ட இரட்டை என்ஜின் கொண்ட நடுத்தர ஹெலிகாப்டர் ஆகும்.. சர்வதேச நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளால் புதிய விமானங்களை வாங்க முடியாமல் ஈரான் திணறி வந்த நிலையில், இந்த விபத்து நடந்துள்ளது. அதிலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது ஈரான் நாட்டின் விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன,

தேர்தல்:

ஈரானின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனிக்கு நெருக்கமானவராகவும் அவரது வாரிசாக மறைந்த அதிபர் ரைசி கருதப்பட்டார்.. இந்தச் சூழலில் ரைசி மரணமடைந்த நிலையில், அது ஈரான் நாட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு இடைக்கால அதிபர் பொறுப்பேற்றுள்ள நிலையில், அடுத்த மாதம் அங்கு அதிபர் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.