ஈரானிய ஜனாதிபதி பயணித்த வானூர்தி விபத்து!

0
74

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் பயணித்த உலங்கு வானூர்தியை அஜர்பைஜான் எல்லையில் உடனடியாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்புக்குழுக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து தொடர்ந்தும் உலங்கு வானூர்தியை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளான பகுதியை மீட்புக் குழுவினர் இதுவரையில் அடையவில்லை என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

ஈரான் – அஜர்பைஜான் எல்லைப் பகுதியிலிருந்து திரும்பிய பின்னர் ஈரான் ஜனாதிபதி வடகிழக்கு நகரமான தப்ரிஸிற்கு சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.